அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு காலாவதியாகிவிட்டது- சி.வி.சண்முகம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், வளர்மதி, கே. பி அன்பழகன், கே.சி வீரமணி, வைகை செல்வன், பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகைச்செல்வன், “அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தது போல வரும் 11 ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் ஒற்றைத் தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும். பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் குறித்து தற்போது பதில் கூற இயலாது” என்றார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், “23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு, ஓபிஎஸ் கையெழுத்தோடு தான் அழைப்பு கொடுக்கப்பட்டது. தான் கையெழுத்தே போடவில்லை என்கிறாரா ஓபிஎஸ். பொதுக்குழுவை கூட்டுவதில் ஆட்சேபனை அல்ல என்று நீதிமன்றத்தில் கூட ஓபிஎஸ் தரப்பு கூறியது. உட...