தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை குறித்த விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதால் வரும் 19ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்ற...