இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (ஏப்பரல் 15ஆம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நாளை (16ஆம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்