14 முறை உலக சாம்பியன்! ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி!
14 முறை உலக சாம்பியன்! ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி! பதினான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரபல WWE வீரர் ட்ரிபிள் ஹெச், தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 90களின் ஆரம்ப காலங்களில் ட்ரிப்பிள் ஹெச், ரசிகர்களிடையே கோலோச்ச துவங்கினார். அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரராக அறியப்பட்ட ட்ரிபிள் ஹெச், வளையத்திற்குள் ஆக்ரோஷமாக காணப்படுவார். போட்டிக்கான ரிங்கினுள், எதிர்க்கும் வீரரை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ரத்தம் தெறிக்க மயிர்கூச்சறெயும் சண்டையான WWE போட்டிகளுக்கு பரவலான ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டிகளின் நாயகனாகவே ட்ரிப்பிள் ஹெச் இருந்தார். பலர் இந்த போட்டிகளில் கோலோச்சினாலும், ட்ரிப்பிள் ஹெச்சின் யுக்தி, ஆக்ரோஷமாக எதிரே நிற்கும் வீரரை வீழ்த்தும் சாமர்த்தியம் ஆகியவை இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை அதிகரிக்க செய்தது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ட்ரிப்பிள் ஹெச், பேட்டியில், தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். நான் மீண்டும் வளையத்திற்குள் சண்டையிட மாட்டேன். என் ...