பிரபல 10 ரூபாய் டாக்டர் மரணம்! பொதுமக்கள் இரங்கல்573261836
பிரபல 10 ரூபாய் டாக்டர் மரணம்! பொதுமக்கள் இரங்கல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார் அசோகன் அதுவும் வெறும் பத்து ரூபாயை டாக்டர் பீஸாக வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்து மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றி வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.