தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துபாய் பயணம்!
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துபாய் பயணம்! தமிழக முதலர் மு.க. ஸ்டாலின், இன்று அரசுமுறை பயணமாக துபாய் செல்லவுள்ளார். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது. இது இந்த மாதம், அதாவது மார்ச் 31 வரை நடக்கவுள்ளது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், துபாயின் இந்த கண்காட்சியில் மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு வார நிகழ்வுகளை துவக்கிவைத்து, தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் செல்கிறார். முதல்வரின் துபாய் பயணம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் கண்காட்சியில் மார்ச் 25 அன்று தமிழ்நாடு அரங்கை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க | மாணவியின் நன்றியுணர்ச்சி புதிதாக இருந்தது: அரசுப் பள்ளி ஆசிரியர் நெகிழ்ச்சிப் பதிவு துபா...