பள்ளி நேரம் காலை 7.30 – 12.30 என மாற்றப்படுகிறதா?
பள்ளி நேரம் காலை 7.30 – 12.30 என மாற்றப்படுகிறதா? தமிழகத்தில் பள்ளி நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை என ஏப்ரல் மத்தியில் விடுமுறை அறிவிக்கப்பட்டு மே மாதம் முழுவதும் விடுமுறையாக இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாக பள்ளி தொடங்கியதால் மே மாத மத்தியில் தான் தேர்வு ஆரம்பிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மே மாதத்தில் கத்தரி வெயில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவது சிரமம் என்றால் பள்ளி நேரத்தை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். மே மாதம் தேர்வு முடியும் வரை மட்டுமாவது இந்த பள்ளி நேரத்தை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வைத்துள்ள கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.