தமிழகத்தில் 97 சதவீதம் நகை கடன் தள்ளுபடி!
தமிழகத்தில் 97 சதவீதம் நகை கடன் தள்ளுபடி! நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இரண்டாவது முறையாக இன்று காலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மத்திய குற்றப்பிரிவில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. ஆட்சியில் எல்லா துறைகளிலும் நிர்வாக சீர்கேடு உள்ளதாகவும், அதன் வெளிப்பாடு தான் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருப்பதாகவும், வினாத்தாள் வெளியாவது தொடர்கதையாகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிகாலத்தில் திமுகவினருக்கும்,பொதுமக்களுக்கும் ஏன் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என அவர் கூறினார். திமுக நிர்வாகிகள் தவறு செய்தால் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்காமல் பெயரளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அதன் விளைவாக திருவொற்றியூர் எம்.எல்.ஏ கேபி சங்கர் மீண்டும் பார் உரிமையாளரை மிரட்டும் சம்பவம் நடைபெற்றதாக அவர் கூறினார். ...