தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு?
தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? சுமார் 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை சில்லறை விற்பனையில் மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த விற்பனை செய்யப்பட்டுவந்தது. இந்த சூழலில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை மீதான விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து, ரூ.102.16-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து, ரூ.92.19-க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலையில் மற்றம் செய்யப்படவில்லை. அதேபோல உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் போர் காரணமாக ஏற்பட்ட சந்திப்பின் விளைவாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயரும் என வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால் சமீபகாலமாக விலை உயர்த்தப்படாமல் தொடர்ந்து சில்லறை விற்பனை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்த்தப்படுவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட...