பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு வசூல்படி உயர்வு.. போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு596556214
பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு வசூல்படி உயர்வு.. போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த, நான்காவது கட்ட பேச்சுவார்த்தை 12.05.2022 அன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில்,போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் கோபால் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டாவை நிர்ணயம் செய்திட வேண்டுமென கேட்டுக்கொண்டனர். முதலமைச்சரின் அறிவுரையின் பேரில், "மாநகர் போக்குவரத்துக் கழகம்,...