தமிழகத்தில் 97 சதவீதம் நகை கடன் தள்ளுபடி!


தமிழகத்தில் 97 சதவீதம் நகை கடன் தள்ளுபடி!


நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி  இரண்டாவது முறையாக இன்று காலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மத்திய குற்றப்பிரிவில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தி.மு.க. ஆட்சியில் எல்லா துறைகளிலும் நிர்வாக சீர்கேடு உள்ளதாகவும், அதன் வெளிப்பாடு தான் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருப்பதாகவும், வினாத்தாள் வெளியாவது தொடர்கதையாகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிகாலத்தில் திமுகவினருக்கும்,பொதுமக்களுக்கும் ஏன் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என அவர் கூறினார்.

திமுக நிர்வாகிகள் தவறு செய்தால் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்காமல் பெயரளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அதன் விளைவாக திருவொற்றியூர் எம்.எல்.ஏ கேபி சங்கர் மீண்டும் பார் உரிமையாளரை மிரட்டும் சம்பவம் நடைபெற்றதாக அவர் கூறினார். திமுக தலைமை கழகம் கட்டுப்பாட்டில் கட்சி தொண்டர்கள் இல்லை என அவர் குற்றஞ்சாட்டினார். 

சட்டம் ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு என அனைத்து பிரச்சனைகளும் தமிழ்நாட்டில் நிலவுவதால் பொதுமக்களே இலங்கையை போன்று இறங்கி போராட வேண்டிய நிலைமை உண்டாகும் என அவர் கூறினார். 

மேலும் நாஞ்சில் சம்பத் கவர்னர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, குடிகாரன் பற்றி பேசமுடியாது என அவர் கூறினார். சொத்துவரி உயர்வு காரணமாக நாளை அதிமுக போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், சென்னையில் ஓ.பி.எஸ் தலைமையிலும், திருச்சியில் ஈ.பி.எஸ் தலைமையிலும், நான் எங்கு கலந்து கொள்வது என்பது குறித்து தலைமை கழகம் முடிவு எடுக்கும் என அவர் கூறினார்.

கொரோனா முடிந்தவுடன் பொருளாதாரம் பெருகும் அப்போது சொத்துவரி முழுமையாக ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, தற்போது உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

பெண்கள் பங்களிப்பு நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்த ஆட்சி அதிமுக என அவர் கூறினார். மேலும் அம்மா உணவகம், லேப்டாப் உள்ளிட்ட அதிமுக திட்டங்களை அழிப்பது போல தாலிக்கு தங்கம் திட்டத்தை அழிப்பதாகவும், 14லட்சம் பெண்கள் அத்திட்டத்தால் பயன்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Gino D rsquo Acampo limoncetti biscuits with limoncello liqueur and ice cream recipe on Gino rsquo s Italian Express #Limoncello