பானி பூரி தண்ணீர் மூலம் காலரா பரவல்.. தடை விதித்த காத்மண்டு பள்ளத்தாக்கு474205002


பானி பூரி தண்ணீர் மூலம் காலரா பரவல்.. தடை விதித்த காத்மண்டு பள்ளத்தாக்கு


நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் பானி பூரி விற்பனை செய்ய லலித்பூர் மாநகராட்சி தடை விதித்துள்ளது.

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் கடந்த சில நாட்களாக காலராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பதாகக் கூறி, பானி பூரி விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்த லலித்பூர் மெட்ரோபாலிடன் சிட்டி (எல்எம்சி) சனிக்கிழமை முடிவு செய்தது.

மாநகரக் காவல்துறைத் தலைவர் சீதாராம் ஹச்சேதுவின் கூற்றுப்படி, பள்ளத்தாக்கில் காலரா பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி, கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளிலும், நடைபாதை பகுதிகளிலும் பானிபூரி விற்பனையை நிறுத்துவதற்கு மாநகரம் உள் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

காத்மாண்டு பள்ளத்தாக்கில் மேலும் ஏழு பேருக்கு காலரா உறுதி செய்யப்பட்ட  நிலையில், பள்ளத்தாக்கில் மொத்த காலரா நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொற்றுநோயியல் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குனர் சுமன்லால் டாஷ் கருத்துப்படி, காத்மாண்டு பெருநகரில் ஐந்து காலரா வழக்குகளும், சந்திரகிரி நகராட்சி மற்றும் புதனில்கந்தா நகராட்சியில் தலா ஒருவருக்கு காலரா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது டெக்குவில் உள்ள சுக்ரராஜ் ட்ரோப்பிக்கல் மற்றும் தொற்று நோய்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், காலரா அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்குச் செல்லுமாறு நேபாள சுகாதார மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

GET ON THE DIAGONAL WITH THE CURVY CHRISTMAS