மெட்ரிக் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு; வெள்ளை அறிக்கை வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்


மெட்ரிக் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு; வெள்ளை அறிக்கை வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைப் போல் மெட்ரிக் பள்ளிகளிலும் 69% சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அது குறித்த வெள்ளை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது.

தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே அவை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிப்பது கட்டாயம் ஆகும். ஆனால், பெரும்பான்மையான தனியார்ப் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை கடைப்பிடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை!

ஊரகப்பகுதிகளில் உள்ள சாதாரண மெட்ரிக் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுகின்றன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் நகர்ப்புறங்களில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகள் தான் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை. அவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog