தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?


தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?


10,12ம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்  மற்றும் மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககம்  வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இன்று காலை 11 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20ம் தேதி 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பலர், கலந்தாய்வு இல்லாமல்  தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். பொதுவாக, அசல் சான்றிதழ் வழங்க சில காலம் ஆகக் கூடும் என்பதால்  தற்காலிக மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கி வருகிறது.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற   மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (10ம் வகுப்பை) மற்றும்  மதிப்பெண் பட்டியலை (Statement of Marks- 12ம் வகுப்பு) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேவைப்படின் மாணவர்கள் அவரவர்களே, https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் இருந்து நேரடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.

இதற்கிடையே, 10,12ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை முன்னதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இதையும் வாசிக்க:   10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு

10ம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாள்களின்‌ மதிப்‌பெண்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர்‌ 22.06.2022 (புதன்‌ கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 29.06.2022 (புதன்‌ கிழமை) மாலை 5.00 மணி வரை தங்கள்‌ பள்ளி வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையம்‌ வழியாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

இதையும் வாசிக்க: இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ஆசிரியர் காலி பணியிடங்களில் முன்னுரிமை 

அதேபோன்று, விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 22.06.2022 (புதன்‌ கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 29.06.2022 (புதன்‌ கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌.

Comments

Popular posts from this blog