யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச பயிற்சி; தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச பயிற்சி; தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
இதுகுறித்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியக் குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம்.
இம்மையத்தில், இந்த ஆண்டு, 225 பேர் தங்கிப் பயில முடியும். இம்மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் இன்று (ஜூன் 24) மாலை 6 மணி முதல் ஜூன் 27 மாலை 6 மணிவரை www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதையும் வாசிக்க: தொழிற்கல்வியில் 7.5% இடஒதுக்கீடுப் பயனாளர்களின் பட்டியல் வெளியீடு: பட்டியலில் இல்லாத மாணவர்கள் மேல்முறையீடு செய்யலாம்
இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் ஜூன் 28 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படும். ஜூன் 29 மற்றும் 30-ம் தேதிகளில் சேர்க்கை நடக்கும். ஜூலை 1 முதல் வகுப்புகள் தொடங்கும்.
இணையத்தில் விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழை பயிற்சி மையத்தில் சேரும்போது ஒப்படைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான விபரங்கள்:
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவலர் பணி, இந்திய வனப்பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசுப் தேர்வு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இதையும் வாசிக்க: இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ஆசிரியர் காலி பணியிடங்களில் முன்னுரிமை
முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளின் மூலம் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். கொள்குறி வகையாக நடத்தப்படும் முதல் நிலைத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி செய்யப்படுகின்றனர். இது, வெறும் தகுதி தேர்வாக இருப்பதால், இதில் பெறும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
தாய்மொழி, ஆங்கிலம் என ஒன்பது தாள்களை உள்ளடக்கியது முதன்மைத் தேர்வு. 1,750 மதிப்பெண்களுக்கு இந்த எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணல் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். நேர்காணல் தேர்வு 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
முதன்மை (Mains Examination) தேர்விலும், நேர்முகத் தேர்விலும் (Personality Interview) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
2023 ஆண்டிற்கான முதன்மைத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் தொடங்குகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment