புதுச்சேரி மதுப்பிரியர்கள் உஷார்! சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் இளைஞர்கள் பலரும் குவிகின்றனர். புதுச்சேரி வரும் நபர்கள் கடற்கரை, ஆரோவில், சுண்ணாம்பாறு படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பலரது விருப்பமாக உள்ளது புதுச்சேரி சாராயம், கள்ளு, மதுபானங்கள் உள்ளது. இவற்றை குடித்துவிட்டு பலரும் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால், காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அந்த வகையில், புதுச்சேரி பெரியக்கடை போலீசார் காந்திவீதி, தியாகு முதலியார் வீதி சந்திப்பில் ரோந்து சென்றனர். புதுச்சேரி தேவி கருமாரியம்மன் பால்குட ஊர்வலம்; கோலாகலம்! அப்போது ஒருவர் மது குடித்து விட்டு போதையில் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்த...