உலக சுகாதார அமைப்புக்கு டெட்ரொஸ் மீண்டும் தலைவரானார்664839075


உலக சுகாதார அமைப்புக்கு டெட்ரொஸ் மீண்டும் தலைவரானார்


லண்டன்: உலக சுகாதார அமைப்புக்கு 2வது முறையாக டெட்ரோஸ் அதனோம் தலைவரானார். எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான டெட்ரோஸ் அதனோம், உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவருடைய பதவிக்காலம் முடிந்து விட்டது. தற்போது, 2வது முறையாக இந்த அமைப்பின் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால், அவர் ஒருமனதாக மீண்டும் இந்த அமைப்பின் தலைவராகி உள்ளார். கொரோனா பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றின் போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உலக நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உலக சுகாதார அமைப்பை  டெட்ரோஸ் திறம்பட வழிநடத்தினார்.  இதன் காரணமாக, தலைவர் பதவியில் இருந்து டெட்ரோஸை மாற்றுவதற்கு பல நாடுகள் தயாராக இல்லை. இதனால், உலக சுகாதார அமைப்பின் தலைவராக தனது 2வது பதவிக் காலத்தை அவர் தொடங்கி உள்ளார். உலக சுகாதார அமைப்பை வழிநடத்தும் முதல் ஆப்பிரிக்கர் மற்றும் மருத்துவராக தகுதி பெறாத ஒரே தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

Comments

Popular posts from this blog