இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (ஏப்பரல் 15ஆம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நாளை (16ஆம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட...
பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை: முதல்வர் அறிவிப்பது எப்போது? 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 16ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆரம்பத்தில் 5ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டது. படிப்படியாக இதனை உயர்த்தி, கடைசியாக 2021 ஆம் ஆண்டு சம்பளம் 10 ஆயிரமாக்கப்பட்டது. அதோடு காலியிடங்களும் 4ஆயிரம் ஆகிவிட்டது. இதனால் 12ஆயிரம் பேர் பணியில் உள்ளார்கள். இவர்களை பணிநிரந்தரம் செய்ய திமுக கடந்த 10 ஆண்டுகளில் கோரிக்கை வைத்தது. திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளில் 181ஆவது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் இடம்பெற்றது. ஸ்டாலின் கேட்டு வாங்கிய ரிப்போர்ட்: ஆட்டம் காணப் போகும் அதிகாரிகள்! உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியரிடத்தில் நேருக்குநேர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் பணிநிரந்தரம் செய்வேன் என உறுதி கொடுத்துள்ளார். திமுக வெ...
புது பிசினஸ்.. பாராட்டு மழையில் வனிதா விஜயகுமார்! சில ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளித்திரையில் நடித்தவர்களில், பலர் இன்று சின்னத்திரைக்கு வந்து கலக்கு கலக்கு என்று கலக்கி கொண்டிருக்கிறார்கள். அப்படி கலக்கி வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை, பெற்றோர் மற்றும் சகோதர்களுடனான கருத்து வேறுபாடுகள், முதல் திருமணம் தோல்வியில் முடிந்த காரணத்தால் அடுத்தடுத்த திருமணங்கள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவுக்கு இவ்வளவு கஷ்டங்களா? தமிழ் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் தான் வனிதா. வனிதாவுக்கு ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகிய 2 தங்கைகள் உள்ளனர். இவர்களும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து உள்ளனர். தற்போது முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா திரைப்படத்தில் ஹீரோயினாக ந...
Comments
Post a Comment