மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தேடப்பட்டுவந்த 4 பேர் குஜராத்தில் கைது!
மும்பையில் 1993-ம் ஆண்டு தாவூத் இப்ராஹிமும், அவரது கூட்டாளிகளும் இணைந்து நடத்திய தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் 257 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்துவந்தது. இந்த வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், சோட்டாசகீல் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கின்றனர்.
அவர்களை சிறப்பு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நான்கு பேர் குஜராத்தின் அகமதாபாத்தில் பதுங்கியிருப்பதாக குஜராத் தீவிரவாதத்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment