Gopichand said the re-release date-670855382


மீண்டும் ரிலீஸ் டேட் சொன்ன கோபீசந்த்


மாருதி இயக்கத்தில் மாச்சோ ஸ்டார் கோபிசந்த் ஹீரோவாக கீதா ஆர்ட்ஸ் 2 பேனரில் உருவாகி வரும் 'பக்கா கமர்ஷியல்' படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அல்லு அரவிந்த் அறிவித்துள்ளார். ஏற்கனவே பலமுறை தள்ளிப்போன இப்படம், ஜூலை 1, 2022 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

கோபிசந்த் ஸ்டைலிஷ் லுக்கில் வக்கீலாக நடிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே வெளியாகியிருக்கும் டீசர், பாடல் படத்தின் சலசலப்பை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்திற்கு ஜாக் பிஜோய் இசையமைக்கிறார். பன்னி வாஸ் தயாரிக்கும் இப்படத்தை எஸ்கேஎன் இணைந்து தயாரிக்கிறார்.

படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் மாருதி மார்க் ஹிலாரியஸ் காமெடி, கமர்ஷியல் அம்சங்களுடன் சுவாரஸ்யமாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இப்படத்தில் கோபிசந்த் சமீபத்திய தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

Comments

Popular posts from this blog

GET ON THE DIAGONAL WITH THE CURVY CHRISTMAS