மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்... பிரபலங்கள் வாழ்த்து!
மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்... பிரபலங்கள் வாழ்த்து!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இசைத் துறையில் உயரிய விருது விழாவான கிராமி அவார்ட்ஸ் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
65வது கிராமி விருது விழாவான இதில் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3வது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ரிக்கி கேஜ், டிவைன் டைட்ஸ் என்ற ஆல்பத்துக்காக கிராமி விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருது வென்ற ரிக்கே கேஜ் அவரது குழுவினருடன் போட்டோ எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
65வது கிராமி விருதுகள்
இசைத்துறையின் மிக உயரிய விருதான கிராமி விருதுகள் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 65வது கிராமி விருது விழாவான இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான கிராமி விருதுகள் இன்று வழங்கப்பட்டன, அதில் இந்திய இசையமைப்பாளர் ரிக்கே கேஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.
3வது முறையாக கிராமி விருது
பெங்களூருவைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3வது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த விழாவில் தனது டிவைன் டைட்ஸ் ஆல்பத்துக்காக ரிக்கி கேஜ் இந்த கிராமி விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 'டிவைன் டைட்ஸ் வித் ராக் - லெஜெண்ட் கோப்லேண்ட்' என்ற ஆல்பத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை ரிக்கி கேஜுக்கு கிடைத்துள்ளது
தொடர்ந்து இரண்டாவது முறையாக விருது
முன்னதாக ரிக்கி கேஜ் கடந்த 2015ம் ஆண்டு கிராமி விருது வென்றிருந்தார். அதன்பின்னர் 2022ம் ஆண்டும் கிராமி விருதை வென்றார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றுள்ளார். 2022, 2023 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ரிக்கி கேஜ் கிராமி விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விருதுடன் போட்டோ வெளியிட்ட ரிக்கி கேஜ்
3வது முறையாக கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தனது குழுவைச் சேர்ந்த ஸ்டீவர்ட் கோப்லேண்ட், ஹெர்பர்ட் வால்ட் ஆகியோரும் ரிக்கி கேஜுடன் உள்ளனர். இதனிடையே Best Immersive Audio Album என்ற கேட்டகரியில் ரிக்கி கேஜ் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment