பெங்களூரில் பெண்ணிற்கு நடந்த அவலம்! கர்நாடகாவில் கோயிலில் நுழைந்த பெண்ணிற்கு அடி உதை.
பெங்களூரில் பெண்ணிற்கு நடந்த அவலம்! கர்நாடகாவில் கோயிலில் நுழைந்த பெண்ணிற்கு அடி உதை.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சாமி கும்பிட வந்த ஒரு பெண்மணியை கோவில் அறங்காவலர்களில் ஒருவரான முருகேசனப்பா என்பவர் அப்பெண்ணின் தலைமுடியை சரசரையாக இழுத்து கோவிலில் வெளியே துரத்தும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அப்பெண்மணி போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். பெண்மணியின் புகாரில் முருகேசனப்பா என்பவர் நான் குளிக்கவில்லை என்றும் தூய்மையாக இல்லை என கூறினார்.
மேலும் கோவிலுக்குள் அனுமதிக்காமல் தன்னை கடுமையாக தாக்கியதோடு மற்றும் இரும்புராடால் தன்னை அடிக்க முயன்றதாகவும் மேலும் நான் கருப்பாக உள்ளதால் தன்னை இழிவு படுத்தி பேசியதாகவும் அந்த பெண்மணி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் முருகேசனப்பா தரப்பில் இருந்தும் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அந்த பெண்மணி கோயிலை விட்டு வெளியேற வேண்டும் ஏனென்றால் அந்த பெண்மணி கோவிலின் கருவறைக்குள் செல்ல முயற்சி செய்ததாகவும் அந்த பெண்ணின் மீது சாமி வந்துவிட்டது என கூறியுள்ளார்.
மேலும் வெங்கடேஸ்வரா எனது கணவர் என்றும் அவர் அருகில் நான் அமர வேண்டும் ஆகையால் நான் கருவறைக்குள் செல்ல வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் முருகேசனப்பா என்பவர் பதில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து முதல் கட்ட நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்த பெங்களூர் போலீசார் இருதரப்பு புகார்களையும் பெற்றுக் கொண்டு மேலும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக இதுகுறித்த புகார்கள் அதிகமாக எழுந்து வருவதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே எழும்பி வருகிறது.
Comments
Post a Comment