முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டிஸ்சார்ஜ்?1277410037
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டிஸ்சார்ஜ்?
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அன்றைய தினம் காலையில் உடல் சோர்வுடன் இருந்த நிலையிலும் அரசு சார்பில் நடந்த 2 முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
செம்மஞ்சேரியில் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்ட பிறகு மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது உடல் மேலும் சோர்வடைந்ததால் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு மதியம் 1 மணியளவில் வீட்டுக்கு வந்து விட்டார்.
உடனே அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. உடனே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சளி, இருமல் குறையாததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள். அவருக்கு நுரையீரலில் 10 சதவீத அளவுக்கு சளி பாதிப்பு இருந்ததை கண்டறிந்தனர்.
உடனே ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சைகள் மேற்கொண்டனர். இதில் அவரது உடல்நிலை தேறி வந்தது. டாக்டர்கள் தினமும் காலை, மாலை இருவேளையும் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான மாத்திரைகளை வழங்கி வந்தனர்.
இதில் இன்று முழுமையாக குணம் அடைந்தார். இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களிக்க வருகிறார்.
அதற்கு முன்னதாக இன்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Comments
Post a Comment