ஆர்சிபி அணியை வீழ்த்தியது பஞ்சாப்
மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. அனுஜ் ராவத் 21 ரன், கேப்டன் டு பிளெஸ்ஸி 88 ரன் (57 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். டு பிளெஸ்ஸி 7 ரன் எடுத்திருந்தபோது ஸ்மித் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷாருக் கான் கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது.
விராத் கோஹ்லி 41 ரன் (29 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 32 ரன்னுடன் (14 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 208...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment