விண்ணப்பித்த 15 நாட்களில்‌ ரேஷன்‌ கார்டு வழங்கப்படும்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு


விண்ணப்பித்த 15 நாட்களில்‌ ரேஷன்‌ கார்டு வழங்கப்படும்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு


குடும்ப அட்டை வேண்டி யார்‌ விண்ணப்பித்தாலும், தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்‌கப்படும்‌ என உணவுத்துறை அமைச்சர் அமைச்சர சக்கரபாணி பேரவையில் தெரிவித்துள்ளார்.‌

சட்டப்பேரவையில்‌ நேற்றைய தினம் கேள்வி நேரத்தின் போது எழும்பூர்‌ திமுக எம்‌எல்‌ஏ பரந்தாமன்‌, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடும்ப அட்டைகள்‌ பெறுவதற்காக விண்ணப்பிக்‌கப்பட்ட மனுக்கள்‌ எத்தணை, வழங்கிய கார்டுகள்‌ எத்தனை? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்‌ சக்கரபாணி, திமுக அரசு பொறுப்பேற்றால்‌, குடும்ப அட்டை வேண்டி யார்‌ விண்ணப்பித்தாலும் தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்‌கப்படும்‌ என்று அறிவித்தார்‌. அந்த
வகையில்‌, முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ 2021ம்‌ ஆண்டு மே மாதம்‌ 7ம்‌ தேதி பொறுப்பேற்றவுடன்‌, 2021 மே மாதம்‌ முதல்‌ கடந்த 14ம்‌ தேதி வரை 10 மாதங்களில்‌ 15,74,543 விண்ணப்பங்கள்‌ குடும்ப அட்டை வழங்ககோரி பெறப்பட்டது.

Also Read:  தாமிரபரணியில் மணல் கொள்ளை.. அம்பலப்படுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு!

இது பரிசீலிக்கப்பட்டு பின்னர்‌ தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்‌ 10,92,064 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்‌ வழங்கி சாதனை படைத்திருக்கிறது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, எழும்பூர் பெரிய மேடு பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் முதியோர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க பிஓஎஸ்-ஐ சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?  என்று எம்எல்ஏ பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர்‌ சக்கரபாணி, பிராாக்ஸி முறைக்கு சென்று பொருட்கள்‌ வழங்க ஒப்புதல்‌ வழங்கப்படும்‌. மேலும்‌ மூத்த குடிமக்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ ஆகியோர்‌, அவர்தம்‌ பிரதிநிதிகள்‌ வாயிலாக இன்றியமையா பண்டங்களை நியாயவிலை கடைகளில்‌ இருந்து பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட வழங்‌கல்‌ அலுவலர்‌, உதவி ஆணையர்‌ (குடிமை பொருள்‌ வழங்கல்‌) ஆகியோர் மூலமாக அங்கீகார சான்று வழங்கப்பட்டு வருகிறது.

அவர்‌கள்‌ குடும்பத்தில் 5 வயதுக்கு மேற்‌பட்டோர்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ அந்த பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்‌. விரல்‌ரேகை தேய்மானம்‌ காரணமாக விரல்ரேகை சரிபார்ப்பு முறையை செயல்படுத்த இயலாத நேர்வில்‌ குடும்ப அட்டை தாரர்களுக்கு தடையின்றி இன்றியமையா பண்டங்கள்‌ விநியோகிக்க உரிய வசதிகள்‌ செய்து தரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog