’இங்க நீங்க போய்டு வாங்க’ சுற்றுலா செல்ல ஜோதிகா - சூர்யா சொல்லும் வெளிநாடு
’இங்க நீங்க போய்டு வாங்க’ சுற்றுலா செல்ல ஜோதிகா - சூர்யா சொல்லும் வெளிநாடு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நட்சத்திர தம்பதி, குடும்பத்தோடு வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளனர். மகன் மற்றும் மகள் ஆகியோர் பள்ளிப் பருவத் தேர்வுகளை முடித்துவிட்டு அடுத்த வகுப்புக்கு செல்ல இருக்கும் நிலையில், அவர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார் சூர்யா. மத்திய அமெரிக்கா நாடான கோஸ்டாரிக்காவுக்கு சென்றுள்ள அவர்கள், அங்குள்ள அனைத்து சாகச விளையாட்டுகள் விளையாடுவதுடன், இயற்கை அழகுகளையும் ரசித்து வருகின்றனர். மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் ஓட்டும் பைக்கின் விலை இத்தனை லட்சமா! இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா . அதில் கோஸ்டாரிக்காவில் கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம், மலைப் பயணம், சாகச விளையாட்டுகள் ஆகிய அழகான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இயற்கையின் அழகுகள் காண்போரையும் வியக்க வைப்பதுடன், நாமும் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. தொங்கு பாலம், கயிறு மூலம் இறங்கி நீர்வீழ்ச்சியில் குளியல் என விடுமுறையை குதூகலமாக கொண்டாடியுள்ளனர். ஆற்றுக்குள்ளும் குட...