சின்னத்திரை நடிகர் பப்லு ப்ரித்விராஜ் 23 வயது பெண்னை 2-வது திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல்! தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் நாயகனாக உயர்ந்தவர் பப்லு ப்ரித்விராஜ். 1971-ம் ஆண்டு நான்கு சுவர்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்து சிவாஜி, ரஜினி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பப்லு ப்ரித்விராஜ், மர்மதேசம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் என்டரி ஆனார். தொடர்ந்து, வாணி ராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த இவர், தற்போது சன்டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்து வருகிறார். மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள பப்லு ப்ரித்விராஜ் கடந்த 1994-ம் ஆண்டு பீனா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆஹத் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பப்லு ப்ரித்விராஜ் தனது மகனை சிறப்பான முறையில் கவனித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்தாலும்...