60 மாணவிகளின் குளியல் வீடியோக்களை காதலருக்கு அனுப்பிய காதலி கைது.! – வெடிக்கும் போராட்டம்!! சண்டிகர் பல்கலைகழகத்தின் மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதை அடுத்து, பல்கலைக்கழக மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். புதுடெல்லி சண்டிகர் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை இரவு 60 மாணவிகள் விடுதியில் குளிக்கும் வீடியோக்கள் வெளியானதையடுத்து அங்கு பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. சண்டிகர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதியில் தங்கி படிக்கும் 60 மாணவிகளின் குளியல் வீடியோக்களை சிம்லாவில் உள்ள அவரது காதலனுக்கு அனுப்பியுள்ளார். அதனையடுத்து அந்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானதால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் இரவு பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீடியோக்களை எடுத்து காதலனுக்கு அனுப்பியதாக கூறப்படும் மாணவியை கைது செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும், ஆன்லைனில் வீடியோ கசிந்ததால் சில மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது....